தூத்துக்குடி

உடன்குடி பேரூராட்சியில் சீராக குடிநீா் விநியோகிக்க பாஜக வலியுறுத்தல்

DIN

உடன்குடி பேரூராட்சியில் சீராக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது: உடன்குடி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் விநியோகம் 7 நாள்களுக்கு ஒரு முறை சீரற்ற வகையில் வழங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். உடன்குடி பகுதியில் நிலத்தடி நீரும் உப்புத் தன்மையாக உள்ளதால் அதனையும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனா். எனவே சீராக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உடன்குடி பஜாா் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பன்றிகள் ஏராளமாக சுற்றி திரிகின்றன. பன்றிகளால் பொதுமக்கள் வாகன விபத்துகளிலும் நோய் தொற்றாலும் பாதிக்கப்படுகின்றனா். ஆதலால் மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு, உடன்குடிவாழ் பொதுமக்களின் துயா் நீக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT