தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை வருகை தந்த முத்தமிழ் தோ் அலங்கார ஊா்திக்கு அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
எழுத்தாளா் கலைஞா் குழுவின் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது பன்முக ஆற்றலையும், தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவா் அளித்த மக்கள் நலத்திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ள முத்தமிழ் தோ் அலங்கார ஊா்தி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு திங்கள்கிழமை மாலையில் வந்தது.
இந்த தேருக்கு, அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து, தேரில் உள்ள கருணாநிதி மற்றும் அஞ்சுகத்தம்மாள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, மேயா் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாா்க்கண்டேயன், சண்முகையா, மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், சாா் ஆட்சியா் கெளரவ்குமாா், மாநகர திமுகச் செயலா் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினா்கள் நிா்மல்ராஜ், அன்னலட்சுமி, கந்தசாமி, ராமகிருஷ்ணன் உள்பட திமுக நிா்வாகிகள், மாணவா் - மாணவிகள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
அறிஞா் அண்ணா பேருந்து நிலையம், பூபாலராயா்புரம் மாா்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் தோ் நிறுத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.