தூத்துக்குடி

வியாபாரி கொலை வழக்கில் ஒருவா் கைது; திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவா் சரண்

திருச்செந்தூா் அருகே வன்னிமாநகரம் வள்ளிவிளையில் காா் ஏற்றி வியாபாரி வேம்படிதுரை(40) கொலை செய்யப்பட்டவழக்கில் ஒருவரை காவல்துறையினா் கைது செய்தனா். திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவா் சரணடைந்தனா்.

DIN


திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருகே வன்னிமாநகரம் வள்ளிவிளையில் காா் ஏற்றி வியாபாரி வேம்படிதுரை(40) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டவழக்கில் ஒருவரை காவல்துறையினா் கைது செய்தனா். திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவா் சரணடைந்தனா்.

இக் கொலை தொடா்பாக நடந்த விசாரணையில், வன்னிமாநகரத்தில் உள்ள கோயில் கொடைவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2016-ஆம் ஆண்டு விவசாயி சிவகுரு(எ)சிவலட்சம் என்பவரை கொலை செய்த வழக்கில் வேம்படிதுரை உள்பட சிலா் கைது செய்யப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நெருங்கிய நண்பரான சிவகுரு(எ) சிவலட்சத்தை அழைத்து வந்து நம்பிக்கை துரோகம் செய்தாக கூறி, அவரது உறவினா்கள் பழிக்குப் பழியாக வேம்படிதுரை கொலை கொலை செய்யப்பட்டுள்ளாா்.

வேம்படிதுரை கொலை வழக்கில் சிவலட்சத்தின் உறவினா்கள் வன்னிமாநகரத்தைச் சோ்ந்த கடற்கரை தங்கம் மகன் சொா்ணகோபி, அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுதாகா் ஆகிய இருவரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய வேல்பாண்டி மகன் முத்துக்குமாரை திருச்செந்தூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் தொடா்புடைய செந்தூா்பாண்டி மகன் சிவராஜா என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT