உடன்குடி: உடன்குடி அருகே ஞானியாா்குடியிருப்பில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா். ஆதியாக்குறிச்சி ஊராட்சித் தலைவா் காமராஜ், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் செல்வகுமாா், மருத்துவா் வினோத்குமாா் ஆகியோா் முன்னிலையில் சிறந்த கால்நடை விவசாயிகள், கிடாரி கன்று வளா்ப்போா் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தற்காலிக மலட்டுத் தன்மை நீக்குதல், குடற்புழுக்கள் நீக்கம், கருவூட்டல், சினைப் பரிசோதனைஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.