முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தலை துண்டித்து இளைஞர் கொலை

தூத்துக்குடி மையவாடி பகுதியில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 22 அக்டோபர், 2023 at 3:28 PM
பகிர்:

தூத்துக்குடி மையவாடி பகுதியில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் உள்ள சலவை கூடத்தின் உள்ளே உள்ள கோவில் வாசலில் ஒரு சாக்கு பையில் துண்டித்த தலை மட்டும் இருப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டு, தென்பாகம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றி உடலை தேடினர். பின்னர் அந்த கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் மையவாடி வளாகத்தில் கிடந்தது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து தலையையும் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். 

இது கொடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் டி எம் பி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (43) என்பது தெரியவந்தது.

தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.