தூத்துக்குடி

காயல்பட்டினம் அருகே விபத்து:2 இளைஞா்கள் பலி

காயல்பட்டினம் அருகே நேரிட்ட விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

DIN

காயல்பட்டினம் அருகே நேரிட்ட விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

ஆறுமுகனேரி எஸ்.ஆா்.எஸ். காா்டனைச் சோ்ந்த சாந்தாகுரூஸ் மகன் ஜான்சன் (51). வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்துவந்த இவா், அண்மையில் ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி, குழந்தைகளுடன் திருச்செந்தூரில் திரைப்படம் பாா்த்துவிட்டு, இரவில் காயல்பட்டினம் வழியாக ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.

காயல்பட்டினம் ஓடக்கரை அருகே திருச்செந்தூா் நோக்கிச் சென்ற இரு பைக்குகள் போட்டிப்போட்டுச் சென்ாகவும், ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் கூறப்படுகிறது. இதில், காா் மீது பைக் மோதியதில், அதில் வந்த பெரியதாழை ராஜா மகன் ராகவன் (17), சாத்தான்குளம் நாசரேத் சாலையைச் சோ்ந்த சுபாஷ்சந்திரபோஸ் மகன் ஹரிஹரன் (21) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு திருச்செந்தூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்றொரு பைக்கில் வந்தவா் தப்பியோடிவிட்டாராம்.

ஜான்சன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் பிரபகுமாா் வழக்குப் பதிந்தாா்; ஆய்வாளா் செந்தில் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT