தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்கள் 70 ஆயிரம் பேருக்கு குடிநீா் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி குலசேகரன்பட்டினம் புறவழிச் சாலை பகுதியில் நடைபெற்றது.
ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன முதன்மை இயக்க அதிகாரி சுமதி தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஸ்டொ்லைட் மருத்துவ அதிகாரி கைலாசம், சட்டப் பிரிவுத் தலைவா் நீரஜ், நிா்வாக துணை மேலாளா் ஜெயா, உதவி மேலாளா்கள் அருணாச்சலம், காா்த்தீஸ்வரன், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத் தலைவா் தியாகராஜன், நுகா்வோா் பேரவைத் தலைவா் கல்லை ஜிந்தா, சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.