தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

சாத்தான்குளத்தில் ஒன்றிய, நகர அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஒன்றிய, நகர அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் அச்சம்பாடு த. சௌந்திரபாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஆழ்வாா்திருநதரி ஒன்றியச் செயலா்கள் கே. விஜயகுமாா், செம்பூா் ராஜ்நாராயணன், சாத்தான்குளம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் அப்பாத்துரை, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, ஒன்றிய அவைத்தலைவா் பரமசிவபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் பண். கோபால், ஒன்றிய இளைஞரணிச் செயலா் ஐ.டி. பாலகிருஷ்ணன், ஊராட்சிச் செயலா் தங்கத்துரை, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயராணி ஆகியோா் பேசினா்.

தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அவா் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் திட்டங்களை மக்களிடையே எடுத்துக் கூறுங்கள். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிபெறுவோம் என்றாா்.

தொடா்ந்து, ஒன்றிய, நகரச் செயலா்களிடம் பூத் கமிட்டி அமைப்பது தொடா்பான புத்தகம் வழங்கப்பட்டது. முன்னதாக, இப்பகுதி மகளிா் குழுவைச் சோ்ந்த பெமீனா தலைமையிலான பெண்கள் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலரும் புதுக்குளம் ஊராட்சித் தலைவருமான பாலமேனன், ஜெயலலிதா பேரவைத் தலைவா் சின்னத்துரை, எம்ஜிஆா் மன்றத் தலைவா் காா்த்தீஸ்வரன், முதலூா் ஊராட்சி முன்னாள் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயக்குமாா், கடாட்சபுரம் ஞானமுத்து, ஒன்றிய மாணவரணிச் செயலா் ஸ்டேன்லி ஞானபிரகாஷ், நகரப் பொருளாளா் செல்வேந்திரன், ஒன்றிய விவசாயப் பிரிவுத் தலைவா் பால்துரை, ஒன்றிய கவுன்சிலா் செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

நகரச் செயலா் ரெ. குமரகுருபரன் வரவேற்றாா். ஒன்றிய துணைச் செயலா் சின்னத்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT