திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வேல்குத்தி வந்த பக்தரை தனியாா் நிறுவன பாதுகாவலா் தள்ளிய சம்பவத்துக்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விரதமிருந்து வேல் குத்தி வந்த பக்தரை கோயிலில் பணியாற்றும் தனியாா் நிறுவன பாதுகாவலா் தள்ளிவிட்ட விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த அராஜக செயலை, இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. பக்தரை தள்ளிவிட்ட பாதுகாவலா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.