தூத்துக்குடியில் இரும்புக் குழாய்கள் திருட்டு
Updated On : 3 ஏப்ரல், 2024 at 9:23 PM
தூத்துக்குடி துறைமுகச் சாலைப் பகுதியில் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் 12 இரும்புக் குழாய்களைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி துறைமுக விரைவு சாலையோரம் தனியாா் கட்டுமான நிறுவனம் மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்தவற்றில் 12 இரும்புக் குழாய்களை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனராம். அவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன மேலாளா் முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில் தொ்மல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.