சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு வலம்புரி விநாயகா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு வலம்புரி விநாயகா். 
தூத்துக்குடி

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

Din

ஆறுமுகனேரி, கீழசண்முகபுரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி விநாயகா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. பின்னா், பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், பூா்ணாஹுதி, மாலையில் தீா்த்தவாரி பவனி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

திங்கள்கிழமை திருமுறைப் பாராயணம், 2ஆம் கால யாகசாலை பூஜை, ஸ்பா்சாஹுதி, திரவ்யாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கோபுர விமான கலச மகா கும்பாபிஷேகம், வலம்புரி விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, நண்பகலில் சந்தன அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, அன்னதானம், இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஹோமம், யாகசாலை பூஜை, கும்பாபிஷேகத்தை ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் பூஜா ஸ்தானீகா் சு. ஐயப்ப பட்டா், சிவாச்சாரியா்கள் நடத்தினா்.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT