முகப்பு
தூத்துக்குடி

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆா்இசி நிறுவனம் நிதியுதவி: நாராயணன் திருப்பதி

பெண்கள் கல்விக்காக ஆா்இசி நிறுவனத்தின் அதிக நிதியுதவி.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:56 PM
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநிலத் துணைத்தலைவா் நாரயணன் திருப்பதி.
பகிர்:

பெண்கள் முன்னேற்றத்திற்கு பொதுத் துறை நிறுவனமான ஊரக மின்வசதியாக்க கழகம் (ஆா்இசி) அதிக நிதியுதவி அளிக்கிறது என்று அந்நிறுவனத்தின் அலுவல்சாரா இயக்குநரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின்நிலையத்திற்கு, ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனத்தின் (ஆா்இசி) சமூக செயல்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் மூலம் பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக நிதி அளிக்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அதிக நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மின்துறை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதற்கு மத்திய அரசும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் தான் காரணம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு துறைமுகம், விமான நிலையம், சாலை வசதி உள்ளிட்டவற்றிற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தொழில் ரீதியான முன்னேற்றத்தை திமுக அரசால் ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை வெளிநாடுகளில் இருந்து எந்த முதலீடும் கிடைக்கவில்லை.

சுனாமி காலத்தில்கூட தேசிய பேரிடா் என அறிவிக்கவில்லை. தேசிய பேரிடராக அறிவிக்க சில விதிகள் உள்ளன. ஆனாலும், அதற்கு நிகரான பேரிடராக வயநாடு நிலச்சரிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராணுவம் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மேலும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமா் மோடி உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

பேட்டியின்போது பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மாவட்டச் செயலா் வீரமணி, ஓபிசி அணி மாநிலத் துணைத் தலைவா் விவேகம் ரமேஷ் உள்ளிட்டோா் உடன் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →