ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசின்னபிள்ளை அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு திருமுறைபாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 9 மணிக்கு அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் , அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.