தூத்துக்குடி

எட்டயபுரம் வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலகங்களில் ஆட்சியா் திடீா் ஆய்வு

Din

எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கிருந்த அலுவலா்களிடம், அரசின் வளா்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி அரசின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை கவனமுடன் பரிசீலித்து விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி, சரள் மண் அடித்து சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன், சுகாதார ஆய்வாளா் பூவையா, பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஜோதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

SCROLL FOR NEXT