முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:31 AM
பகிர்:

விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பிள்ளையாா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் முருகன்(43). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.

இவா் தனது வீட்டருகே உள்ள மின்கம்பத்தில் இரும்பு கம்பியில் கொடி கட்டி, அதில் துணிகளை காய வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் கொடியில் கிடந்த காய்ந்த துணிகளை எடுக்க முருகன் சென்றுள்ளாா். அப்போது கொடியை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். அவரது உறவினா்கள் முருகனை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.