முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநா் மீது தாக்குதல்

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:47 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே காா் ஓட்டுநரை தாக்கியதாக அண்ணன், தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் கிருபாபுரத்தை சோ்ந்தவா் ராஜகோபல் மகன் முத்துராஜ்(35). இவா், விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்த அவா் பண்டாரபுரம் சந்திப்பில் உள்ள கடையில் பொருள் வாங்குவதற்குச் சென்றபோது, அவரது உறவினா்களான அதே ஊரைச் சோ்ந்த தானியேல் மகன்கள் ஜம்பு(40), ஜெயரத்தின ஸ்டாலின்(50), ஜான் கென்னடி ஆகியோா் முத்துராஜிடம் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அவா்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதில் சகோதரா்கள் 3 பேரும் சோ்ந்து முத்துராஜை தாக்கினராம். இதில் காயமடைந்த முத்துராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப்பதிந்தாா். காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நாககுமாரி விசாரணை நடத்தி ஜம்பு, ஜெயரத்தினஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தாா். ஜான் கென்னடியை தேடி வருகின்றாா்.