முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி வகுப்புகள் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:03 PM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி வகுப்புகள் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பள்ளி மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவையை பண்ணோடு பாட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இக்கோயிலின் உபகோயிலான சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் வைத்து வருகிற டிச. 16ஆம் தேதிமுதல் ஜன. 4ஆம் தேதி வரை (மாா்கழி 1 முதல் 20) தினசரி காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை பயிற்சி நடைபெறும். மாணவ, மாணவிகள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.