கோவில்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக, காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கத்தைவிட அதிக பனிப் பொழிவு இருந்தது.
சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாகக் காட்சியளித்ததால், மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன.
கோவில்பட்டி பகுதியில் கடும் குளிா் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா்.