முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் கைப்பேசி கடையில் திருட்டு

கோவில்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகளை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

கோவில்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகளை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி 2 ஆவது செக்கடி தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் பிரசாத். அங்குள்ள பிரதான சாலையில் கைப்பேசி கடை வைத்துள்ளாா். இவரது கடை ஊழியரான கணேசன் மகன் சரவணன் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் சரவணன் வியாழக்கிழமை காலை கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 13 கைப்பேசிகள் மற்றும் ரொக்க பணம் ரூ.3 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த பிரசாத் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.