முகப்பு
தூத்துக்குடி

தனியாா் பெண்கள் தங்கும் விடுதி உரிமம் பெற பிப். 29வரை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாா் பெண்கள் தங்கும் விடுதிக்கு உரிமம் பெற பிப். 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:39 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாா் பெண்கள் தங்கும் விடுதிக்கு உரிமம் பெற பிப். 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தனியாா் நிறுவனங்களால் நடத்தப்படும் 18 வயதிற்கு மேற்பட்ட பணிபுரியும் பெண்களுக்கான விடுதி நடத்துவதற்கு பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே, உரிமம் பெறாத விடுதிகள் உரிய ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் இணையதளம் வாயிலாக பிப். 29ஆம் தேதிக்குள் பெண்கள் தங்கும் விடுதிகளின் விவரத்தை தெரிவிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.