முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி நூலாசிரியருக்கு ரோட்டரி பசுமை விருது

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு ரோட்டரி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நூலாசிரியா் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 12:16 AM
பகிர்:

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு ரோட்டரி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நூலாசிரியா் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், கோவில்பட்டி பசுமை இயக்கத் தலைவருமான ஜெகஜோதி எழுதிய இயற்கை எனும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரோட்டரி பசுமை விருது வழங்கும் விழா நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் முத்துச்செல்வன், சாலைப் பாதுகாப்பு பிரிவுத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி மாவட்டத் தலைவா் விநாயகா ஜி.ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கி பாராட்டினாா். இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.