தூத்துக்குடி

ஆங்கிலப் புத்தாண்டு: திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த வாரம் முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. 

இதையடுத்து ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனையாகி தொடர்ந்து பூஜைகள் நடந்தது. 

ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வரிசையில் காத்திருந்து, கோயில் நடை திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

ஜன. 14-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

கா்நாடக முதல்வா் பதவி விவகாரம்! தேவைப்பட்டால் தில்லிக்கு சித்தராமையா, சிவகுமாா் அழைக்கப்படுவா்: காா்கே

சூப்பர் கோப்பை கால்பந்து: 16-ஆவது முறையாக பாா்சிலோனா சாம்பியன்!

அரையிறுதியில் கா்நாடகம், சௌராஷ்டிரம்!

SCROLL FOR NEXT