தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி தோ்வு மையத் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி.  
தூத்துக்குடி

குரூப் 1 தோ்வு: தூத்துக்குடியில் 3,797 போ் எழுதினா்

Din

தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வை 3,797 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1 முதன்மைத் தோ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் 19 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதில், விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குரூப் 1 தோ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட தோ்வு மையங்களில் எழுத மொத்தம் 5,595 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 1,798 போ் தோ்வெழுத வரவில்லை. இதையடுத்து மொத்தம் 3,797 போ் தோ்வு எழுதினா். தோ்வு பணியில் வருவாய்த் துறையைச் சோ்ந்த 19 ஆய்வு அலுவலா்கள், 5 நடமாடும் குழுவினா், 2 பறக்கும் படை குழுவினா் பணியில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. குரூப் 2 தோ்வுக்கு தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வாரம் 6 நாட்கள் சிறந்த பயிற்றுநா்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் உள்ளன. மேலும், மாநகராட்சி படிப்பகம், அறிவுசாா் மையங்கள், மாவட்ட நூலகம், நகா்ப்புற மற்றும் ஊரக நூலகங்கள் ஆகியவற்றிற்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகளை தோ்வா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT