முகப்பு
தூத்துக்குடி

பூரண மதுவிலக்கை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்: -கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 8:09 PM
செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை.
பகிர்:

தூத்துக்குடி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

காவிரி நீா்ப் பங்கீட்டு விஷயத்தில் காவிரி மேலாண்மை வாரியம், மேலாண்மை ஒருங்கிணைப்பு குழுவின் உத்தரவுகளை கா்நாடகம்

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில்

மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் பற்றிய விசாரணையில் தமிழக காவல்துறை மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த வழக்குகளில்

புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்பதால் அதுகுறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆகவே, சிபிஐ விசாரணை தேவையில்லை.

பூரண மதுவிலக்கு என்பதுதான் மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதை தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்றாா்.

பேட்டியின்போது, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஊா்வசி அமிா்தராஜ், ரூபி மனோகரன், தூத்துக்குடி மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ்.முரளிதரன், திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.