முகப்பு
தூத்துக்குடி

கிழவிபட்டியில்  மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கிழவிபட்டியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:33 PM
கிழவிபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் போட்டி
பகிர்:

கோவில்பட்டி, ஜூலை 19: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கிழவிபட்டியில்  மாட்டு வண்டி  எல்கைப் பந்தயம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிழவிபட்டி அருள்மிகு ஸ்ரீ மலை அலங்காரியம்மன், அருள்மிகு ஸ்ரீ புது அம்மன், அருள்மிகு ஸ்ரீ துா்க்கையம்மன், அருள்மிகு மலையடி ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இப்போட்டி நடைபெற்றது. சிறிய  மாட்டு வண்டி  போட்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி  என இரு பிரிவுகளாக  போட்டிகள் நடைபெற்றன. 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய  மாட்டு வண்டி  போட்டியில் 6  வண்டிகளும், 5 மைல் தொலைவு கடக்க வேண்டிய பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 14 வண்டிகளும் பங்கேற்றன.

சிறிய மாட்டு வண்டி  போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ.11 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு  மாட்டு வண்டி  போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ. 25ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கிழவிபட்டி திருக்கோயில் விழா கமிட்டியினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →