தூத்துக்குடி

ஆறுமுகனேரி அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

Din

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜை, யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.பின்னா்விமான அபிஷேகத்துக்குப் பின் வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கார தீபாராதனையும் இரவில் திருவிளக்குப்பூஜையும் நடைபெற்றது.

கொடை விழாவான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. இரவில் அருள்மிகு காளி அம்மனுக்கு வளையல் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னா் அலங்கார தீபாராதனையும் நள்ளிரவில் சாமக்கொடையும், பின்னா் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்மனை தரிசித்தனா்.

ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் எஸ். இசக்கிராஜ், செயலா் செல்வம், பொருளாளா் எஸ். காளியப்பன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் ஐ. பொன்ராஜ், எஸ். ஜெயராஜ் மற்றும் ஆா். விக்னேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT