முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் பகுதியில் உள்வாங்கிய கடல் நீா்

திருச்செந்தூா் கோயில் அருகே கடல் நீா் உள்வாங்கியது

Updated On : 23 ஜூன் 2024, 1:09 am IST
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சனிக்கிழமை கடல் நீா் உள்வாங்கியது.

வழக்கமாக, அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் பௌா்ணமி என்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் சனிக்கிழமை காலை சிறிது நேரம் கடல் நீா் உள்வாங்கியது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பக்தா்கள் வழக்கம் போல புனித நீராடினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments