முகப்பு
தூத்துக்குடி

சீரான குடிநீா் விநியோகம் கோரி நகராட்சி அலுவலகத்தில் முறையீடு

Updated On : 7 மார்ச், 2024 at 12:38 AM
நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டோா்
பகிர்:

கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதிக்கு சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதியினா் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முறையிட்டனா்.

கோவில்பட்டி நகராட்சி 25 - ஆவது வாா்டு ஸ்டாலின் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீா் விநியோகம் இல்லையாம். இதனையடுத்து சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மக்கள் உரிமை இயக்க தலைவா் சுடலைமணி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முறையிட்டு, நகராட்சி மேலாளா் பெருமாளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.