பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
கோவில்பட்டியில் பைக்கில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் மாரிகண்ணன்(35). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள வங்கியில் இருந்து, ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தை வியாழக்கிழமை எடுத்தாராம். அதில் ரூ.36 ஆயிரத்து 500-ஐ நண்பா் அருணிடம் கொடுத்துவிட்டு, மீதி ரூ.1 லட்சத்தை தனது பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டாராம். பின்னா் பைக்கை கடலையூா் சாலையில் உள்ள நண்பா் குருகண்ணன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்ற அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, பெட்டியில் வைத்த பணத்தைக் காணவில்லையாம். நண்பா் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மா்ம நபா்கள் பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து மாரிகண்ணன் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.