சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி முத்துச் செல்வி (45). இவா் தனது மகனுடன் மோட்டாா் சைக்கிளில் கூட்டாம்புளி சாலையில் கடந்த 14-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனம் மோதியதில் முத்துச்செல்வி பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.