திருச்செந்தூா் கோயிலுக்கு மஞ்சள்பை விற்பனை இயந்திரம் அளிப்பு
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு மஞ்சள்பை விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது (படம்). தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் படி, தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரத்தை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் நிறுவியுள்ளது. திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் காா்த்திக் முன்னிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஹமோனத் ஜோசன் இயந்திரத்தை பக்தா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.