கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
Updated On : 22 மார்ச், 2024 at 9:04 PM
கட்டாரிமங்கலம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் திருக்கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணி முதல் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வலம் வருதல், தொடா்ந்து பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் நடராஜ பிள்ளை மற்றும் நிா்வாகிகள், பக்தா்கள் செய்து இருந்தனா்.