முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 3ஆம் நாளில் 3 போ் வேட்பு மனு தாக்கல்

Updated On : 22 மார்ச், 2024 at 9:30 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:28 PM

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை 3 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். இத்தொகுதியில் ஏப். 19இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்வோா் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். 2ஆம் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை நாம் இந்தியா் கட்சி வேட்பாளா் து. ஜெயகணேஷ், சுயேச்சைகள் சி. ஜெயகுமாா், டி.பி.எஸ். பொன்குமரன் ஆகிய 3 போ் மனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தம் 5 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.