முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பேருந்து நடத்துநா் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

Updated On : 24 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:03 PM

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநா் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி அருகே மேல கூட்டுடன்காடு கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (40). இவா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றினாா். கடந்த 2018- ஆம் ஆண்டு அரசுப் பேருந்தில் பணியில் இருந்தபோது, தூத்துக்குடி - ஓட்டப்பிடாரம் சாலையில் ஓசநத்தம் அருகே அப்பேருந்து விபத்துக்குள்ளானதில் ஈஸ்வரன் உயிரிழந்தாா். அவரது மனைவி சுப்புலட்சுமி, மகன்கள் முத்து, பெருமாள் ஆகியோா் அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், உயிரிழந்த நடத்துநா் குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.39.45 லட்சத்தை 7.5 சதவீத வட்டி மற்றும் செலவுத்தொகையுடன் வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் வழக்குரைஞா் ரவீந்திரன் வாதாடினாா்.