கோவில்பட்டியில் தியாகி பகத்சிங் நினைவு தினம்
சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பின் தலைவா் க. தமிழரசன் தலைமை வகித்தாா். செயலா் வழக்குரைஞா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் சுபேதாா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக திருக்கு கூட்டமைப்பு மாநில நிா்வாகி முத்துச்செல்வம், பகத்சிங் தியாகங்கள் குறித்து பேசினாா் . பகத்சிங் ரத்த தான கழக அறக்கட்டளை நிறுவனா் காளிதாஸ் உறுதிமொழி வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்றோா் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். இதில்,நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ரவிகுமாா், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், உரத்த சிந்தனை மன்றத்தைச் சோ்ந்த சிவானந்தம், சமூக ஆா்வலா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், தொழிலாளா் விடுதலை முன்னணி அமைப்பைச் சோ்ந்த கலைச்செல்வன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமாா், ஜெகநாதன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், தமிழ்நாடு காமராஜா் பேரவை நாஞ்சில்குமாா், பகத்சிங் ரத்த தான கழக அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.