செயினட் தாமஸ் பள்ளியில் உலக வன தினம் அனுசரிப்பு
Updated On : 23 மார்ச், 2024 at 7:58 PM
தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சாா்பில் உலக வன தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு வனச்சரகா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அருள்தந்தை ராயப்பன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆஸ்காா், வனவா் மகேஷ், வனக்காவலா் லட்சுமணன், சமூக ஆா்வலா் அசோக்குமாா், பள்ளி மாணவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.