முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் நெல்லை பாஜக வேட்பாளா் வழிபாடு

Updated On : 24 மார்ச், 2024 at 4:00 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 7:39 PM

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா். அவா் தோ்தலில் வெற்றிபெற வேண்டி சத்ரு சம்ஹார யாகம், சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறும்போது, மக்களவைத் தோ்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று 3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வருவதற்காக சிறப்பு பூஜை செய்து வழிபட்டேன் என்றாா்.