முகப்பு
தூத்துக்குடி

இனிகோ நகா் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

Updated On : 30 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 7:33 PM

தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தென்பாகம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், சடலமாக மீட்கப்பட்டவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.