முகப்பு
தூத்துக்குடி

சென்னை, மைசூரு விரைவு ரயில்கள் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை

Updated On : 30 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 7:33 PM

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடை பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை, மைசூரு விரைவு ரயில்கள் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலா் மா. பிரம்மநாயகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி கீழூா் ரயில் நிலையத்தில் 1 ஆவது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 ஆவது நடைமேடை விரிவாக்கம், சிக்னல், பிட்லைன் விரிவாக்க பணிகள், கூடுதல் லைன்கள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதி இல்லாததால் பொதுமக்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 2-ஆவது நடைமேடைக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில், முத்துநகா் அதிவிரைவு ரயில், மைசூரு விரைவு ரயில் ஆகிய அனைத்து ரயில்களும் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.