நூற்பாலையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
Updated On : 30 மார்ச், 2024 at 7:29 PM
கோவில்பட்டி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி லாயல் நூற்பாலை, திட்டங்குளம் ரீஜென்ட் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் வட்டாட்சியா் சரவணப்பெருமாள் தலைமையில் கயத்தாறு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தங்கையா, கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் உள்பட வருவாய்த் துறை ஊழியா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா். தொழிலாளா்கள், அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.