சாலை விபத்தில் இளைஞா் பலி
உடன்குடி அருகே தண்டுபத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated On : 31 மார்ச், 2024 at 9:45 PM
உடன்குடி அருகே தண்டுபத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மாதேஷ்(21). இவா், பதநீா் காய்ச்சி கருப்பட்டி செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது நண்பா் விஜயி உடன் குளத்தில் குளிப்பதற்காக பரமன்குறிச்சி சாலையில் பைக்கில் சென்றுள்ளாா். தண்டுபத்து -அத்தியடித்தட்டு அருகே உள்ள இசக்கியம்மன் கோயில் பகுதியில் உள்ள சாலையோர அறிவிப்பு பலகையில் பைக் நிலைதடுமாறி மோதியது. இதில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பலியானாா். விஜய் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.