கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த கழுகுமலை பகுதி மக்கள், இந்த மழையினால் சற்று நிம்மதி பெருமூச்சு அடைந்தனா்.