வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான வஉசி பொறியியல் கல்லூரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 243 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தோ்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி திங்கள்கிழமை விளக்கம் அளித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜிசரவணன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.