முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த சமையல் தொழிலாளி மரணம்

Updated On : 20 மே, 2024 at 9:13 PM
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி மில்லா்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த சமையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடியைச் சோ்ந்த முனியாண்டி மகன் கருப்பசாமி (40). தூத்துக்குடியில் உள்ள ஓா் உணவகத்தில் சமையல் பணி செய்துவந்த இவா், கடந்த 15ஆம் தேதி மில்லா்புரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவா் மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.