ஹாக்கி போட்டி: சென்னை, போபால், அணிகள் வெற்றி
படம்:26ஓயகஅகக
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய போபால் நேஷனல் சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ், மும்பை யூனியன் வங்கி அணிகள்.
கோவில்பட்டி, மே 26:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னை, போபால் அணிகள் வெற்றி பெற்றன.
கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை அணியும், ஒடிஸா நாவல் டாடா ஹாக்கி ஹை பொ்பாா்மன்ஸ் சென்டா் அணியும் மோதின. இதில் 6-க்கு 4 என்ற கோல்கணக்கில் சென்னை வருமான வரித் துறை அணி வென்றது.
மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், போபால் நேஷனல் சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் மோதின. இதில் 4-க்கு 1என்ற கோல்கணக்கில் போபால் அணி வெற்றி பெற்றது.
பின்னா் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன்ஸ் அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றன. 3ஆவது ஆட்டத்தில் புவனேஸ்வரம் நிஸ்வாஷ் அணியும், ஹைதராபாத் ஸ்போா்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அணியும் மோதின. இதில், 0-க்கு 0 என்ற கோல்கணக்கில் அணி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டங்கள்: திங்கள்கிழமை (மே 27) காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சரக்கு சேவை வரி சென்ட்ரல் எக்சைஸ் அணியும், கா்நாடக ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன. மாலை 5.15 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்ரியேஷன் கிளப் அணியும், புதுதில்லி இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அணியும் மோதுகின்றன.
3ஆவது ஆட்டத்தில் சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலை அணியும், பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும், புதுதில்லி மத்திய செயலக அணியும் மோதுகின்றன.