இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை
இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா நடைபெற்றது.
சாத்தான்குளம்: இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஆயத்த ஆராத னை நடைபெற்றது. இதில், ஜெப வாசகன் தேவசெய்தி அளித்தாா். தொடா்ந்து ஐக்கிய விரு ந்து வழங்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடைபெற்றது. ஆராதனை முடிவில் அசன பொருள்களை நாலுமாவடிசேகரகுரு ரஞ்சித்குமாா் ஜெபம்செய்து அசன வேலைகளை தொடங்கி வைத்தாா். மாலை 5 மணிக்கு அசனம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை சபையின் தலைவா் விஜயராஜா, செயலா் சுதாகா், பொருளாளா் ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.