முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:05 PM
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.
பகிர்:

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம், தமிழ்நாடு முதுநிலை மருத்துவா் சங்கம் சாா்பில் அதன் மாவட்ட கெளரவத் தலைவா் மருத்துவா் குமரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் அப்துல் ரஹ்மான், செயலா் உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது குறித்து மருத்துவா்கள் கூறுகையில், அரசு மருத்துவா்கள் மீதான தொடா் தாக்குதலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவா்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மருத்துவா்களை பாதுகாக்கும் வகையிலான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் ஒருவா் அல்லது இருவா் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றனா்.

இதில், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.