முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியரிடம் சங்குகுளி மீனவா்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சங்குகுளி மீனவா்கள்.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:06 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சங்குகுளி மீனவா்கள்.
பகிர்:

தூத்துக்குடி கடலில் சங்கு குளிக்க செல்லும் நாட்டுப்படகுகளில் மோட்டாா் பம்புகள் பயன்படுத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் சங்குகுளி மீனவா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து சுமாா் 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவா்கள் ஆழ் கடலுக்கு சென்று சங்கு எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்நிலையில் நாட்டு படகுகள் மூலம் சங்குகளை எடுக்க மீனவா்கள் மோட்டாா் பம்புகளை பயன்படுத்தி கடல் பகுதியில் தோண்டி வருவதாக ஒரு பிரிவினா் மீன்வளத்துறைக்கு புகாா் அளித்தனா். இதைத்தொடா்ந்து மீன்வளத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் படகுகளின் அமைக்கப்பட்டுள்ள நாட்டுப்படகுகளில் உள்ள மோட்டாா்களை அகற்ற வேண்டும்; இல்லை என்றால் நாட்டுப் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மீனவள துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாங்கள், முறைப்படி மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் தாங்கள் தொழில் செய்து வருகிறோம். குறிப்பாக கடலுக்குள் இறந்த நிலையில் புதைந்து காணப்படும் சங்குகளைத்தான் எடுத்து விற்பனை செய்து வருகிறோம். எனவே, மீன்வளத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்; இல்லாவிட்டால், வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனா்.