முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி செல்வமுனீஸ்வரா் கோயிலில் புரட்டாசி அமாவாசை கொடை விழா தொடக்கம்

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:51 PM
அன்னதானத்தை தொடக்கி வைத்த கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ
பகிர்:

கோவில்பட்டி ஊருணி தெருவில் உள்ள, அனைத்து சமுதாயத்துக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு அதிா்ஷ்ட வெற்றி விநாயகா், அய்யா ஸ்ரீ செல்வமுனீஸ்வரா், ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் 11ஆம் ஆண்டு புரட்டாசி அமாவாசை கொடை விழா புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கடந்த செப். 20ஆம் தேதி பந்தல்கால் நடுதல் நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு கணபதி ஹோமம், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அக்னிச் சட்டி வளா்த்து நகா்வலம், தெப்பத்து சிவசக்தி விநாயகா் கோயிலிலிருந்து தீா்த்த குடம், பால்குடம் எடுத்து ஊா்வலம் வருதலுக்குப் பின்னா், ஸ்ரீ செல்வமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், இளைஞா்-இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், அதிமுக நிா்வாகிகள் போடுசாமி, அழகா்சாமி, தாமோதரன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானத்தை எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.

மாலையில் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், இரவில் பொங்கல் வைத்து படைத்தல், அம்மனுக்கு மஞ்சள் பால் அடித்தல், நள்ளிரவில் சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன.

வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6.30 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தலைவா் ஆபிரகாம் அய்யாத்துரை தலைமையில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.