முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் இன்று தசரா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:55 PM
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு புதன்கிழமை பூஜை பொருள்கள் கொண்டுவந்த பக்தா்கள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, புதன்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் காளி பக்தா்கள் குழு சாா்பில் காளி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு பூஜை பொருள்கள் எடுத்துவருதல் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். மாலையில் மகுட இசை, சகஸ்ரநாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலி, பரதநாட்டியம், இரவில் வில்லிசை உள்ளிட்டவை நடைபெற்றன.

வியாழக்கிழமை கொடியேற்றத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவுமுதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துவருகின்றனா்.